தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு


‘பன்னி வளர்த்தவன் பணக்காரன்; கோழி வளர்த்தவன் கோடீஸ்வரன்’ என்றொரு சொல் கிராமப்புறங்களில் உண்டு.சேமிப்பைக் குறிக்கும் சின்னம் பன்றி. அதனால்தான் உண்டியலின் வடிவத்தைப் பன்றி உருவமாக அமைத்திருக்கிறார்கள்.

ஆனால், பன்றிகளுக்கு இருந்த இந்த நல்ல பெயரெல்லாம் சமீபத்திய பன்றிக் காய்ச்சலால் பறிபோய்விட்டது.

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?

ஸ்வைன் இன்புளுயன்சா ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கு / கோழிகளுக்கு (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.

பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.

மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.

கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது?

ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது.

இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.

முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும்.

என்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

* உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.
* நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
* முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
* ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிபோட்டுக் கொள்ளவும் (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவலாம்).
* வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ளவும்.
* தும்மும் போதும், இருமும் போதும் வாயை மூடிக் கொள்ளவும். உடனே கையை அலம்பிகொள்ளவும்.
* நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.
* உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும்.. இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம்.
* மாஸ்க் அணித்து பயணிக்கவும்.
* மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ளவும்.
* இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக் காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால், தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஒதுக்கி கொள்ளவும்.

நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்

* தொடர்ந்த தலை வலி
* குளிருதல், நடுங்குதல்
* இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்
* பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு
* தலை சுற்றல் / மயக்கம்
* பசியின்மை
* உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி
* இடைவிடாத காய்ச்சல்
* வயிற்று போக்கு
* வாந்தி எடுத்தல்
* மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்
* உயிரிழப்பும் ஏற்படலாம்

குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?

* தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்
* மூச்சு விட சிரமப் படுவார்கள்
* உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும்.. (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்
* தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்
* அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல்
* தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்
* தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்

இந்நோய்க்கு மருந்துகள் ஏதும் உள்ளனவா?

"oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) இந்நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாக நம்புகிறார்கள். நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தொற்றுநோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள். 1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ நோய் தான் அதிகம் பேரை கொன்றுள்ளது. இந்த நோய் தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்த நோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை அங்கு முடங்கியுள்ளது.

வெப்ப நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை, என ஒரு பக்கம் கூறினாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்த நோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர், என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 30 லட்சம் பேருக்கு தேவையான "டேமிப்ளு'' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்த வகையான "ப்ளு'' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சிப்லா, ரன்பாக்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்துகளை சப்ளை செய்ய ஒப்பு கொண்டுள்ளன.
============ ========= ========= ========= ========= ========
இந்தியாவில் எங்கெங்கு இதற்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப் படுகின்றன?
------------ --------- --------- --------- --------- --------- --------- -----
Chennai
King Institute of Preventive Medicine (24/7 Service)
Guindy, Chennai – 32
(044) 22501520, 22501521 & 22501522

Communicable Diseases Hospital
Thondiarpet, Chennai
(044) 25912686/87/ 88, 9444459543

Government General Hospital
Opp. Central Railway Station, Chennai – 03
(044) 25305000, 25305723, 25305721, 25330300
------------ --------- --------- --------- --------- --------- --------- ------
Pune
Naidu Hospital
Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01
(020) 26058243

National Institute of Virology
20A Ambedkar Road , Pune – 11
(020) 26006290
------------ --------- --------- --------- --------- --------- --------- ------
Kolkata
ID Hospital
57,Beliaghata, Beliaghata Road , Kolkata - 10‎
(033) 23701252
------------ --------- --------- --------- --------- --------- --------- ------
Coimbatore
Government General Hospital
Near Railway Station,
Trichy Road , Coimbatore – 18
(0422) 2301393, 2301394, 2301395, 2301396
------------ --------- --------- --------- --------- --------- --------- ------
Hyderabad
Govt. General and Chest Diseases Hospital ,
Erragadda, Hyderabad
(040) 23814939
------------ --------- --------- --------- --------- --------- --------- ------
Mumbai
Kasturba Gandhi Hospital
Arthur Road, N M Joshi Marg, Jacob Circle , Mumbai - 11
(022) 23083901, 23092458, 23004512

Sir J J Hospital
J J Marg, Byculla, Mumbai - 08
(022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366

Haffkine Institute
Acharya Donde Marg, Parel, Mumbai – 12
(022) 24160947, 24160961, 24160962
------------ --------- --------- --------- --------- --------- --------- ------
Kerala
Government Medical College
Gandhi Nagar P O, Kottayam - 08
(0481) 2597311,2597312

Government Medical College
Vandanam P O, Allapuzha - 05
(0477) 2282015

Taluk Hospital
Railway Station Road , Alwaye, Ernakulam
(0484) 2624040 Sathyajit - 09847840051

Taluk Hospital
Perumbavoor PO , Ernakulam 542
(0484) 2523138 Vipin - 09447305200
------------ --------- --------- --------- --------- --------- --------- ------
Gurgaon & Delhi

All India Institute of Medical Sciences (AIIMS)
Ansari Nagar, Aurobindo Marg Ring Road , New Delhi – 29
(011) 26594404, 26861698
Prof. R C Deka - 9868397464

National Institute for Communicable Diseases
22, Sham Nath Marg,
New Delhi – 54
(011) 23971272/060/ 344/524/449/ 326

Dr. Ram Manohar Lohia Hospital
Kharak Singh Marg,
New Delhi – 01
(011) 23741640, 23741649, 23741639
Dr. N K Chaturvedi – 9811101704

Vallabhai Patel Chest Institute
University Enclave, New Delhi- 07
(011) 27667102, 27667441, 27667667, 27666182
------------ --------- --------- --------- --------- --------- --------- ------
Bangalore
Victoria Hospital
K R Market, Kalasipalayam, Bangalore – 02
(080) 26703294
Dr. Gangadhar - 94480-49863

SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases
Hosur Road , Hombegowda Nagar, Bangalore – 29
(080) 26631923
Dr. Shivaraj - 99801-48780
------------ --------- --------- --------- --------- --------- --------- ------

நோய் உங்களையோ, உங்களுக்கு தெரிந்தவரையோ தாக்கி இருப்பதாக அறிய வந்தால், இருபத்து நாலு மணிநேர தொலைபேசி சேவை மையத்தை 1075 என்ற எண்ணிலும் 011-23921401 அல்லது EMR Control Room 011-23061469-மைத் தொடர்பு கொள்ளவும்.

1.உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ-சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??

2.உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்..எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட்,ஐஸ்கிரிம்,வளையல்,கம்மல்,இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்..இது என்னங்க நியாயம்???

3.உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா...ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??

4.போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய், அஜித் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது...அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை..படம் சூப்பரா இருக்குபா..இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???

5.அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??(வந்த எஸ்.எம்.எஸ். என்னவென்றால்..குட் நைட்...ஸ்வீட் டீரீம்ஸ்..) இனிமே எங்க தூங்க...!!

6.நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே..ஏன்..??

7.நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்..ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..???(கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க..)

8.எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...???(பின் குறிப்பு..உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)

9.ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..???(இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)

10.கம்யூட்டர் முன்னாடி சும்மாவே இருந்தாலும் சாட் பண்ணும் போது மட்டும் எப்படி 'ஐ யம் பிஸி' ன்னு ஸ்டேடஸ் போடுரிங்க??..

பெண்கள் யாராச்சும் இதை படிச்சிங்கன்னா பதில் சொல்லிட்டு போங்களேன்..
ரொம்ப நாளா பதில் தெரியாம தலைய பிச்சு பிச்சு லைட்டா சொட்டையா ஆயிட்டேன்...

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.

2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.

3. நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.

4. சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.

5. சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.

6. சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.

7. எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.

8. சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.

9. பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.

10. சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.

11. அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.

12. தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

13. இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.

14. வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.

15. எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.

16. வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.

17. புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.

18. மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.

19. சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.

20. வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.

21. சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.

22. வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.

23. மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.

24. சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.

25. நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.

மேலே படித்துவிட்டு சிரித்தபிறகு சிந்திப்பவர்களுக்கு சில துளிகள் கீழே

சிகரெட்டை விட்டவர் வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
சீக்கு வந்து சாவாரே சாவார்.


நியூசி லாந்துநாட்டில் ஆன்டனி ராட்ஜஸ் என்னும் டாக்டர் இளைஞர்கள் மத்தி யில் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறார்.

800க்கும் மேற்பட்ட இளைஞர் களை தேர்வு செய்து அவர்களுக்கு சிகரெட் பிடிப்பதை நிறுத்தும் ஆலோச னைகளை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த சோதனையில் பங்கேற்ற 28 சதவீதம் பேர் புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டிருக்கின்றனர். சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு பல நேரங்களில் சிகரெட் பிடிக்கும் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியா ததே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அந்த நேரங்களில் எல்லாம் எஸ்.எம்.எஸ். வந்து காப்பாற்றி விடும் என்பது நல்ல யுத்திதான். அது மட்டுமல்லாமல், சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்போது எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்ப முயற்சிப்பது மனதை திசை திருப்பிவிடும் என்று ராட்ஜஸ் கூறுகிறார். தன்னுடைய ஆய்வில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் இப்படி எஸ்.எம்.எஸ்.ல் ஆழ்ந்து சிகரெட் பிடிப்பதை மறந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இளைய தலைமுறையினர் செல் போனும், கையுமாக சுத்திக் கொண்டி ருக்கும்நிலையில் புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு எஸ்.எம்.எஸ். சரியான ஆயுதமாக இருக்கும் என்று கருத வேண்டி இருக்கிறது.

நீங்களும் சிகரெட் பிடிக்க தோணும்போது உங்கள் mobil inbox-ல் இருக்கும் மொக்கையோ, கடியோ வெட்டிபய நண்பர்களுக்கு அனுப்ப முயற்சிக்கலாமே….


What's In That Cigarette?
There are over 4,000 chemicals in tobacco smoke and at least 69 of those chemicals are known to cause cancer.

Thanks to Dinamalar.
ஆகஸ்ட் 25,2009,00:00 IST

இலவசம், விலை குறைப்பு என்ற போர்வையில், பொருட்களின் எடையைக் குறைத்து, நுகர்வோரை பல பன்னாட்டு நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன.இரண்டு வாங்கினால் மூன்று இலவசம், இது வாங்கினால் அது இலவசம் என, இலவசங்களைக் கண்டு பழகிப்போன மக்கள், இலவசம் என்றாலே அந்த பொருளை வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.


இந்த பேராசை தான், தற்போது, பெரும் நஷ்டத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இலவசங்களை கொடுத்து, பல பன்னாட்டு நிறுவனங்கள், நம் நாட்டு தயாரிப்புப் பொருட்களை அண்ட விடாமல் செய்து வருகின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் ஒரு பொருளின் விலையைக் குறைத்தால், பன்னாட்டு நிறுவனங்கள் சில நேரங்களில், விலையைக் குறைக்கின்றன; பல நேரங்களில் பொருளின் எடையை குறைக்கின்றன.
பொருளை மட்டும் பார்க்கும் பொதுமக்கள் கண்ணுக்கு, எடை குறைப்பு தெரிவதில்லை. தற்போது, நுகர்வோர் சந்தையில், அதிகளவில் வெளிவரும் குளியல் சோப்பு, வாஷிங் பவுடர், சலவை சோப்பு மற்றும் சில உணவுப் பொருட்களில், பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, பொருட்கள் அளவு இருப்பதில்லை.


பொருளின் எடையைக் குறைக்கும் நிறுவனங்கள், விலையில் எந்த குறைப்பும் செய்வதில்லை; மாறாக, சமயம் பார்த்து உயர்த்தவே செய்கின்றன. விளம்பரம் என்ற வியாபார யுக்தி, மக்களின் கண்ணை முழுவதுமாக மறைத்துவிடுகிறது.குளியல் சோப்புகளான ஹமாம், ரெக்சோனா, லக்ஸ், லைபாய் மற்றும் சலவை சோப்பான ரின் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனம் விலையை நிலை நிறுத்தி, எடையைக் குறைத்துள் ளது. 400 கிராம் விம் பார் 365 கிராம் தான் உள்ளது. இதன் விலை பல காலமாக 19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


அதேபோல, 200 கிராம் என்பது 192 கிராம் தான் உள்ளது. இவ்வாறாக நுகர்வோர் அதிகளவில் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் 8 முதல் 150 கிராம் வரையில் எடை குறைப்பு உள்ளது.எடை குறைவு குறித்து, இந்நிறுவனங்கள் பாக்கெட்களின் மீது அறிவிப்பு எதையும் தருவதில்லை. ஒரு கிலோ டைடு சலவை பவுடர் பாக்கெட்டை எடை போட்டு பார்க்கும்போது 900 கிராம் மட்டுமே உள்ளது; 100 கிராம் குறைவாக உள்ளது. நுகர்வோர் எடை போட்டு பார்த்தால், தங்கள் பெயர் தான் கெடுகிறது என, வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


சோப்பு, சலவைத்தூள் போன்றவற்றை தயாரிக்கப் பயன்படும் கச்சா பொருட்கள் விலை குறைந்துள்ள சூழலில், இந்திய தயாரிப்புகள் விலை குறைந்துள்ளன. குறிப்பாக, உள்ளூரில் தயாரிக்கப்படும் சலவை சோப்பு, பவுடர்கள் விலையில் கடும் இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதே மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் மற்ற பன்னாட்டு நிறுவனங்கள், ஒப்புக்கு கூட விலையை குறைக்கவில்லை. மாறாக, எடை குறைப்பை செய்துள்ளன.


இதுகுறித்து, தமிழக அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறியதாவது:கச்சா எண்ணெய் விலை குறைவு, மூலப்பொருட்கள் விலை குறைவு என்பது அனைவருக்கும் தெரியும். சுதேசி தயாரிப்புகள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டும் குறையவில்லை. மாறாக, எடையை கணிசமாக குறைத்துள்ளன.விலையைக் குறைக்காமல், தங்கள் நிறுவனத்தின் துணை தயாரிப்புகளை இலவசமாக கொடுக்கும் தந்திரத்தைக் கையாள் கின்றன. உதாரணமாக, ஹமாம் சோப் வாங்கினால், தற்போது, இரண்டு ரூபாய் மதிப்புள்ள புரூ காபி தூள் பாக்கெட் இலவசம். நுகர்வோர் இலவசத்தை கண்டு ஏமாறுகின்றனர்.

பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் பன்றி காய்ச்சலை - புலிகேசி

ஸ்பைடெர் மேன் கற்பனையான இந்த கதாபாத்திரம் நிஜத்திலும் இருந்ததால்!!! ஆம் நிஜ ஸ்பைடெர் மேன் தென் இந்தியாவில் இருக்கிறார்.

கர்நாடக மாநிலம் சித்திர துர்கா கோட்டையில் மிக உயரமான பாறை தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு அந்த பாறையில் ஒரு சிலந்தி ஒட்டிக்கொண்டு ஏறுவது போல் தோன்றும் நெருங்கி பார்த்தல் அதிசியமும் ஆச்சரியமும். செங்குத்தான பாறையில் உச்சியை நோக்கி போய்கொண்டிருப்பவர் ஒரு இளைஞர் பார்பதேற்கே தலை சுற்றும் உயரத்திற்கு எப்படி ஏறுகிறார்!!! அந்த பாறை மட்டுமல்ல சித்திர துர்கா கோட்டையின் மதில் சுவர்களிலும் மிக சுலபமாக ஏறும் இவர், பொதுவாக மலை பாறை போன்றவைகளில் ஏறுவதற்கு என இருக்கும் உபகரணங்களை உபயோகபடுதவதில்லை. பாறை ஏறுவதற்கு முன் கீழிருந்து மேல் வரை பார்த்து கொண்டு பாறையில் பிடிப்பிற்கு எதுவும் இல்லாததால் முதல் பிடிப்பிற்கு மட்டும் சில நொடிகள் அவகாசம் எடுக்கிறார் பிறகு எந்த தயக்கமும் இல்லாமல் ஏறும் இவர் சர சரவென சில நொடிகளில் உச்சியை அடைந்து அனைவரையும் வியக்க வைக்கிறார். இவர்தான் இந்திய நிஜ ஸ்பைடெர் மேன் ஜோதி ராஜ்.

தமிழ்நாடு தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள கம்பத்து மட்டைதான் இவரது சொந்த ஊர். செங்குத்தான சுவர்களில் சுலபமாக ஏறுவதும் தலைகீழாக தொங்குவதுமாக நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இவர் எங்கே தவறி விழுந்து விடுவாரோ என பார்பவர்களை பதைபதைக்க வைத்துவிட்டு பயமில்லாம ஏறுகிறார். 150 அடி பாறையில் ஏறும்போது பாறையுடன் பிடிங்கி கீழே விழுந்து நெஞ்சு, கை, கால் என எழுந்து நடக்க முடியாத நிலையில் காட்டுக்குள் மூன்று நாள் இருதிருக்கிறார் பிறகு மெதுவாக தவழ்ந்து ஊருக்கு வந்த இவர், மீண்டும் 300அடி பள்ளத்தில் இருந்து விழுந்து கால் உடைந்த போதிலும் மனம் தளராமல் பயிற்சி செய்து மீண்டும் மலை ஏறி கொண்டிருக்கிறார்.
இன்று ஊர் அறிய உலகறிய இருக்கும் இவரின் கடந்த காலம் பற்றி சில, தேனியில் வறுமையான குடும்பத்தில் பிறந்த ஜோதி ராஜ் எட்டு வயதில் கர்நாடகவிற்க்கு உருக்கு கம்பெனியில் கொத்தடிமையாக சேர்ந்தார். ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்த ஜோதிராஜ் கட்டிட தொளிலாளியானார். 18 வயதில் துன்பமும் துயரமும் இருத்த வாழ்க்கையால் விரக்தி அடைந்த ஜோதிராஜ் சித்திர துர்கா கோட்டையின் உயரமான பாறையில் இருந்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்களின் குரல் கேட்டு கூச்சத்துடன் கீழ் இறங்கி வந்தார். மறுநாள் கோவில் அருகில் படுத்திருந்தவரின் பார்வையில் பட்ட குரங்கை கூர்ந்து கவனித்த அவர் நேற்று ஏறிய பாறையை இன்று குரங்கு போல் ஏறுவோம் என தனது முதல் சாதனை பயணத்தை துவங்கினார். குரங்கை குருவாக என்னும் இவரை குரங்கு ராஜா என்றும் அழைக்கின்றனர். Monkey king என்னும் பதக்கம் பெற்ற இவரின் சில புகைப்படங்கள்.
நன்றி : Vijay Tv (நடந்தது என்ன)
Video Link: http://www.youtube.com/watch?v=lUCZTz5zxxs







Ready to leave your job behind and become your own boss? It takes a certain kind of person to make it through the first few years.

1. Don't work for less than you can afford to, but do offer a discount to customers or clients who sign contracts with you.

2. Find people who will refer jobs to you. If they send you nightmare jobs, make sure they're balanced out with rewarding (profitable!) ones.

3. Surround yourself with supportive people and don't be discouraged by anyone. If your idea is good and you're determined to stick with it through the first few difficult years, your chances of success are great.

4. Be flexible in your thinking.
Prepare to change the way you work, the products you use and the services you offer, in order to meet the demands of your customers.

5. Admit your mistakes, correct them and carry on.
(For example, if you purchase a piece of equipment that does not meet your expectations, send it back, sell it or exchange it!)

6. Develop a good relationship with your bank manager and creditors.
Show a genuine interest in solving problems. Pay as much as you can afford to, to everyone to whom you owe money.

7. Get trained!
You'll be spending a lot of time doing things that have nothing to do with your area of expertise, like bookkeeping, marketing, and IT support!

8. Avoid isolation. Even if you work closely with your clients, you won't be part of a gang anymore. Develop your own network of entrepreneurs that you see regularly and bounce ideas off. Ideally they’ll allow you to vent your anger and share your successes.

9. Separate your work and personal life. Set your working hours and stick to a strict timetable. When you're not available to clients, leave a message on your answer machine letting them know when they can expect a reply from you. Let them know how to reach you in an emergency.

10. Plan some ‘thinking time’ into every day.
If you pack your diary with back-to-back activities, your business will never grow.

11. Plan time to do something you enjoy at least a few times a week - recharge your batteries!

12. Write a business plan so you're clear about what you're doing, and update it every year.

13. Develop an excellent telephone manner and react quickly to any complaints or problems.

14. Confirm orders personally and immediately, especially those you receive on email.

15. Never lose sight of the big picture
– look for innovative, little-explored directions in which to take your business.

16. When you find someone cleverer than you, employ them!

17. Solicit advice from people who know, for example, other entrepreneurs and reputable small business advisers – the DTI offers lots of information and support for new businesses.

18. Don't enter a business or a venture that you know nothing about.
You'll be running to catch up for the rest of your business life.

19. Have an existing, loyal customer base and start locally.

20. Be aware that you will get through any initial investment quickly, so ensure you are covered financially until at least the end of the second year.

21. Focus on a specific goal and work at it until it’s achieved.

22. Never worry about how to get things done when you are first developing your idea. Money and resources will come together once you have set your goals and begun to work at them.

23. Make quality in every aspect of your business your primary focus and aim.
If it isn't, you will eventually go out of business.

24. Use the Internet.
Use email. Build a website (if you aren't familiar with websites, try HTML for Dummies), send out email newsletters, buy online banner advertisements and register your site with all the major search engines.

25. Delegate. You might have to hire a good PA, lawyer, or marketing professional to ensure you'll be profitable in the future.
-By Cynthia Schmae

சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters