தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு


 
 
 
 
 
 
 


பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது
பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது.

 
பிறர்செய்வதில் எது உனக்கு பிடிக்கவில்லையோ
அதை நீ மற்றவர்களுக்கு செய்யாதே.

நல்லதையோ தீயதையோ எதை ஒருவன்
செய்தாலும் அதன் விளைவுகள் அவனை பின்
தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பணம் போகும் போது அதற்கு நூறு கால்கள்
ஆனால் வரும் போது இரண்டு கால்கள்.

நீ சந்தோசமாக இருக்கும் போது வாக்குறுதிகளை கொட்டாதே
நீ கவலையோடு இருக்கும் போது கடிதங்களை எழுதாதே.

தோல்வியைக்கண்டு அஞ்சுபவர்களிடம் இருந்து
வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கிறது.

சோம்பலின் விளைவு வறுமை
முயற்சியின் விளைவு மூலதனம்.

விழுவது வெட்கம் அல்ல
விழுந்து கிடப்பதே வெட்கம்.

நல்லறிவு எந்த மூலையில் எவ்வளவு தூரத்தில்
இருந்தாலும் அதை தேடிச்செல்.

அறிவில்லாத கண்ணியம் பலவீனமானது பயமற்றது
ஆனால் கண்ணியமில்லாத அறிவு அஞ்சத்தக்கது.


சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters