தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு

ஸ்பைடெர் மேன் கற்பனையான இந்த கதாபாத்திரம் நிஜத்திலும் இருந்ததால்!!! ஆம் நிஜ ஸ்பைடெர் மேன் தென் இந்தியாவில் இருக்கிறார்.

கர்நாடக மாநிலம் சித்திர துர்கா கோட்டையில் மிக உயரமான பாறை தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு அந்த பாறையில் ஒரு சிலந்தி ஒட்டிக்கொண்டு ஏறுவது போல் தோன்றும் நெருங்கி பார்த்தல் அதிசியமும் ஆச்சரியமும். செங்குத்தான பாறையில் உச்சியை நோக்கி போய்கொண்டிருப்பவர் ஒரு இளைஞர் பார்பதேற்கே தலை சுற்றும் உயரத்திற்கு எப்படி ஏறுகிறார்!!! அந்த பாறை மட்டுமல்ல சித்திர துர்கா கோட்டையின் மதில் சுவர்களிலும் மிக சுலபமாக ஏறும் இவர், பொதுவாக மலை பாறை போன்றவைகளில் ஏறுவதற்கு என இருக்கும் உபகரணங்களை உபயோகபடுதவதில்லை. பாறை ஏறுவதற்கு முன் கீழிருந்து மேல் வரை பார்த்து கொண்டு பாறையில் பிடிப்பிற்கு எதுவும் இல்லாததால் முதல் பிடிப்பிற்கு மட்டும் சில நொடிகள் அவகாசம் எடுக்கிறார் பிறகு எந்த தயக்கமும் இல்லாமல் ஏறும் இவர் சர சரவென சில நொடிகளில் உச்சியை அடைந்து அனைவரையும் வியக்க வைக்கிறார். இவர்தான் இந்திய நிஜ ஸ்பைடெர் மேன் ஜோதி ராஜ்.

தமிழ்நாடு தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள கம்பத்து மட்டைதான் இவரது சொந்த ஊர். செங்குத்தான சுவர்களில் சுலபமாக ஏறுவதும் தலைகீழாக தொங்குவதுமாக நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இவர் எங்கே தவறி விழுந்து விடுவாரோ என பார்பவர்களை பதைபதைக்க வைத்துவிட்டு பயமில்லாம ஏறுகிறார். 150 அடி பாறையில் ஏறும்போது பாறையுடன் பிடிங்கி கீழே விழுந்து நெஞ்சு, கை, கால் என எழுந்து நடக்க முடியாத நிலையில் காட்டுக்குள் மூன்று நாள் இருதிருக்கிறார் பிறகு மெதுவாக தவழ்ந்து ஊருக்கு வந்த இவர், மீண்டும் 300அடி பள்ளத்தில் இருந்து விழுந்து கால் உடைந்த போதிலும் மனம் தளராமல் பயிற்சி செய்து மீண்டும் மலை ஏறி கொண்டிருக்கிறார்.
இன்று ஊர் அறிய உலகறிய இருக்கும் இவரின் கடந்த காலம் பற்றி சில, தேனியில் வறுமையான குடும்பத்தில் பிறந்த ஜோதி ராஜ் எட்டு வயதில் கர்நாடகவிற்க்கு உருக்கு கம்பெனியில் கொத்தடிமையாக சேர்ந்தார். ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பித்த ஜோதிராஜ் கட்டிட தொளிலாளியானார். 18 வயதில் துன்பமும் துயரமும் இருத்த வாழ்க்கையால் விரக்தி அடைந்த ஜோதிராஜ் சித்திர துர்கா கோட்டையின் உயரமான பாறையில் இருந்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்களின் குரல் கேட்டு கூச்சத்துடன் கீழ் இறங்கி வந்தார். மறுநாள் கோவில் அருகில் படுத்திருந்தவரின் பார்வையில் பட்ட குரங்கை கூர்ந்து கவனித்த அவர் நேற்று ஏறிய பாறையை இன்று குரங்கு போல் ஏறுவோம் என தனது முதல் சாதனை பயணத்தை துவங்கினார். குரங்கை குருவாக என்னும் இவரை குரங்கு ராஜா என்றும் அழைக்கின்றனர். Monkey king என்னும் பதக்கம் பெற்ற இவரின் சில புகைப்படங்கள்.
நன்றி : Vijay Tv (நடந்தது என்ன)
Video Link: http://www.youtube.com/watch?v=lUCZTz5zxxs







சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters