தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு

அன்பு XXXXX ,

கடந்த ஆறு மாத காலமாக என்னை(யும்) லவ்வுனதுக்கு மிக்க நன்றி. நீ இந்த கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் இந் நேர‌த்தில், உனக்கு புதிய இந்த வார காதலன் கிடைத்திருப்பான் என நம்புகிறேன். அப்படி இன்னும் கிடைக்கவில்லையெனில் கிடைப்பதற்காக அந்த எல்லாம் வல்ல கடலையாண்டவரை வேண்டுகின்றேன். சரி, விஷயத்துக்கு வர்றேன்.

நிற்க,
( கடிதமெழுதுன இதெல்லாம் போடனும்)உன்னை மறப்பதற்காக, அந்த வலியை குறைப்பதற்காக மட்டும் நான் அடுத்த தெருவில் ஒருத்தியை இப்போது லவ்வுகிறேன். ஆமாம், இது உனக்கு தெரிஞ்சு (மட்டும்) இது என்னோட நாலாவது காதல்தான். முந்தைய காதல்களில் நிறைய கற்றுக் கொண்டதால், இப்போ என்னால ரொம்ப ஈஸியாவே லவ்வ முடியுது.

காதல் வந்தாதான் கவிதை எழுத வரும்ன்னு உனக்கு தெரியும். ஆனா, இப்போ எனக்கு கவிதை எழுதறதுக்கு போரடிக்கிது. நாலு (ள்)ஆகிப் போச்சுல.அதனாலதான் உனக்கு கடிதம் எழுதுறேன். அதே மாதிரி, இப்பல்லாம் கவிதை எழுதுறது அவ்ளோ ஈஸி இல்ல. எல்லாரும் களத்தில இறங்கிட்டாய்ங்கே. அவனவன் பிரிச்சு மேய்ஞ்சுட்ருக்காங்கே. சரி, அவனுக கவிதையெல்லாம் காப்பியடிச்சு என் ஃபிகர்கிட்ட கொடுத்துராலாம்னு பார்த்தா, இப்போல்லாம் Blogஅ எல்லாரும் கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்கலாம்ல! அப்படியிருந்தும் கொஞ்சம் Bit "கப் ஐஸ்" அடிச்சிதான் இத எழுதிறேன்.  அதனால, நாம லவ்வும்போது நான் உன்னை வச்சு எழுதுன கவிதையெல்லாத்தையும் (?) எனக்கு திருப்பி அனுப்பி விட்டா நல்லாருக்கும். நான் வேற அத ஜெராக்ஸ் எடுத்து வைக்க மறந்துட்டேன். அப்டியே நான் அவளோட பேரை மட்டும் மாத்தி எழுதி குடுத்துருவேன். தயவு செஞ்சு குடுத்துட்டா,உனக்கு புண்ணியமாப் போகும் தங்கச்சி.

அப்பறம் இன்னோரு மேட்டரு, உன்கிட்ட என்னோட ஒரு அழகான (?) ஃபோட்டோ ஒன்னு இருக்குல்ல, அதையும் லெட்டர்ஸோட சேர்த்து அனுப்பி வச்சா, நல்லாருக்கும். துரதிருஷ்டவசமா,அது நான் மொத மொதல்ல லவ்வ ஆரம்பிக்கிம்போது எடுத்ததுனால ,அந்த ஃபோட்டோவுல மட்டும்தான் நான் அழகா இருப்பேன்.

அடுத்து என்னன்னா, நம்ம லவ்வுன இந்த ஆறு மாசத்துல நான் உனக்கு ஏகப்பட்ட காசு செலவழிச்சுருக்கேன். அது எவ்வளவு எனன் விவர்ம்ன்றத இங்க சொல்லிருக்கேன். அந்த காசையெல்லாம் கூடிய சீக்கிரம் திருப்பி கொடுத்திட்டன்னா, நான் என்னோட புது லவ்வருக்கு செலவழிக்க உதவும். கொஞ்சம் கீழ படிச்சு பாரேன்...

* மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிட்ட வகையில் ரூ 895/-

* கூல் ட்ரிங்க்ஸ் குடித்த‌ வகையில் ரூ2938/-

* ஸ்நாகஸ் (வகையறக்கள்) தின்ற வகையில் ரூ5645/-

* ஜூஸ் குடித்த‌ வகையில் ரூ3845/-

* சினிமாவுக்கு கூட்டிட்டு போன வகையில் ரூ1235/-

* நெட் சாட்டிங் வகையில் ரூ1499/-

* மொபைல் ரீசார்ஜ் செய்து குடுத்த வகையில் ரூ2546/-

* பெட்ரோல் செலவு வகையில் ரூ4255/-

* கிஃப்ட் வாங்கித் தந்த வகையில் ரூ7850/-

மொத்தம் 30,708 ரூபாய் ( முப்பதாயிரத்து எழு நூற்றியெட்டு ரூபாய் மட்டுமே..!)
செக் ஏற்றுக் கொள்ளப்பட மாட்ட்து. ரொக்கமாக கொடுக்கவும்.

மேல சொன்ன அமௌன்ட, கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணீரு.அப்பறம் நான் உனக்கு குடுத்த கிஃப்ட்ஸ் எதாவது நீ வச்சுருந்தன்னா, அத நான் பாதி விலைக்கு வாங்கிக்கிறதுக்கும் தயாரா இருக்கேன்.

நான் ஒன்னும் அந்தளவுக்கு, இரக்கமில்லாதவன் இல்ல. அதனால் நீ எனக்கு எழுதுன லவ்லெட்டர்ஸ் எல்லாத்தையும் (சுமார் 3 கிலோ எடையுள்ள‌) இதோட சேர்த்து அனுப்பி வச்சுருக்கேன்.பெற்றுக் கொள்ளவும். மேலும் நீ எனக்காக எதுவும் செலவு செய்திருந்தால், திருப்பி வாங்கிக் கொள்ளவும். ஆனால், நீதான் என் கூட வரும்போது மாட்டும் பர்ஸ மறந்து வச்சுட்டு வந்துருவியே. அப்பறம் எப்பிடி செலவாகியிருக்கும்..? மட்டும் விளக்கம் கொடுக்கவும்.

எது எப்பிடியோ,YYYYYY உடனான உனது தற்போதைய ஆறாவது காதலென கேள்விப்பட்டேன். அந்த காதல்(லாவது) சுபத்தில் முடியட்டுமென, எல்லாம் வல்ல அந்த கடலையாண்டவரை வேண்டுகின்றேன். நன்றி. மேல சொன்ன அமௌன்ட,கூடிய சீக்கிரம் செட்டில் பண்ணவும்.

இப்படிக்கு,
உன் ஐந்தாவது காதலன்
ZZZZZ



1 comments:

Dear Editor

How can u post these kind of waste (rubbish) stories.

we are expecting some good advises which can encourage people.

I am really very upset after reading this story.

Pls remove this story from your blog immediately.

regards

un unmaiyana thozan

Post a Comment

சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters